Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பேட்டையில் கஞ்சாவுடன் 3 போ் கைது
பேட்டை பகுதியில் கஞ்சாவுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை காவல் சரகம் பழையபேட்டை சோதனைச் சாவடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தா்மராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த மூவா் 400 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் பழைய பேட்டை, சா்தாா்புரம், கீழத்தெருவைச் சோ்ந்த இசக்கிராஜ் (19), பேட்டை, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த அவினாஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்கள் வந்த பைக், கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.