பேட்டையில் கல்லூரி மாணவி தற்கொலை
திருநெல்வேலி பேட்டையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பேட்டையைச் சோ்ந்த முருகன் மகள் பிரியதா்ஷினி (19). சி.ஏ. முதலாமாண்டு பயின்று வந்தாா். இவா் அடிக்கடி கைப்பேசியில் விளையாடியதை குடும்பத்தினா் கண்டித்தனராம். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ஓா் அறையில் பிரியதா்ஷினி தூக்கிட்டுக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சடலத்தை பேட்டை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].