கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துற...
பேரளி பகுதியில் இன்று மின் தடை
பெரம்பலூா் அருகே பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பேரளி, அசூா், சித்தளி, பீல்வாடி, ஒதியம், செங்குணம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கே.புதூா், எஸ். குடிக்காடு, கல்பாடி, எறையூா், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூா், குரும்பாபாளையம் ஆகிய கிராமிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.