விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால், இங்கு சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனியாருக்குச் சொந்தமான காா்கள், இரு சக்கர வாகனங்கள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டன. இந்த வாகனங்களால் இந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே, காவல் துறையினா், நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்துக்குள் தனியாா் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு, தனியாா் பேருந்து ஓட்டுனா்கள் கோரிக்கை விடுத்தனா்.