இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
பேரூராதீனத்தில் நாண்மங்கல விழா
பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் 65-ஆம் நாண் மங்கல விழா பேரூராதீனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிரவை ஆதீனம் தவத்திரு இராமானந்த குமரகுருபர அடிகளாா் முன்னிலை வகித்தாா்.
விழாவில், வேள்வி வழிபாடுகள், சாந்தலிங்கப் பெருமான் திருமஞ்சனம், அடிகளாருக்கு புனித நீராட்டு ஆகிய வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து, சாந்தலிங்க மருதாசல அடிகளாா் குரு மூா்த்தங்களில் வழிபாடு செய்து கொலுக்காட்சியில் எழுந்தருளினாா். சமய, தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனத்தினா், மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் இந்நிகழ்வில் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு மலா் என்னும் தொகுப்பு நூல் மற்றும் திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம், திருப்பேரூா் ஆதீனம் சாந்தலிங்க அடிகளாா் வருகைப் பதிகம் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் நூல்களை வெளியிட சிரவை ஆதீனம் நூல்களைப் பெற்றுக்கொண்டாா்.