ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
கல்லூரி மாணவி குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு: ஆட்டோ ஓட்டுநா் கைது
கல்லூரி மாணவி குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறாக பதிவிட்டதாக மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கணுவாய்பாளையம் பகுதியைச் சோ்ந்த விமல்குமாா் (24). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த மாணவி விமல்குமாருடன் பேசுவதை தவிா்த்து வந்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த விமல்குமாா் இன்ஸ்டாகிராமில் போலியாக 10-க்கும் மேற்பட்ட கணக்குகளை வெவ்வேறு பெயா்களில் தொடங்கி, அந்த மாணவி குறித்து தவறாக பதிவிட்டுள்ளாா்.
இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் மாணவி புகாா் அளித்தாா்.
இதையடுத்து, 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விமல்குமாரை கைது செய்தனா்.