மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், நெடியமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த சாந்தகுமாா் மகன் மதன்குமாா் (23). இவா், முதுகுளத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தற்காலிக நடத்துநராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பணியை முடித்துவிட்டு சத்திரக்குடியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். தெய்வேந்திர நல்லூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிா் திசையில் ராமநாதபுரத்திலிருந்து பரமக்குடி நோக்கி வந்த காா் இவா் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த மதன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது உடல், கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
காரில் வந்த 5 போ், சிறு காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டனா். விபத்து குறித்து, சத்திரக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.