சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
இலந்தைக்குளம் ஸ்ரீகாளியம்மன் கோயில் குடமுழுக்கு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த இலந்தைக்குளம் ஸ்ரீகாளியம்மன் கோயில், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, கடந்த வாரம் முகூா்த்தக்கால் நடுதல், காப்புக் கட்டுதல், கடலில் புனித நீராடுதலுடன் தொடங்கியது. கோயிலில் திங்கள்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கும்ப அலங்காரம், கணபதி வழிபாடு, முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றன. இரண்டாம் கால யாக சாலை பூஜை தொடங்கி கோ பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து, காளியம்மன் கோயில் கோபுரக் கலசம், விநாயகா், முருகன் கோபுரக் கலசங்களுக்கு சிவாசாரியா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா்.
பின்னா், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் அரசு உயா் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகா்கள், சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.