செய்திகள் :

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

post image

மறைந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல், கமுதி அருகேயுள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த சேதுராமன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றவா். சென்னை விருகம்பாக்கம் சின்மயாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவா், நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதினாா்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டக் கவிதைகளைப் பதிப்பித்தாா். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்த இவா், பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவா். திருவள்ளுவா் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனாா் மூத்த தமிழறிஞா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றவா். இந்த நிலையில், இவா் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானாா்.

இவரது உடல், சொந்த ஊரான கமுதியை அடுத்த ஆண்டநாயகபுரத்தில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக திங்கள்கிழமை வைக்கப்பட்டது.

கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன், பரமக்குடி கோட்டாட்சியா் கங்காதேவி (பொ), முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியா பாண்டியன், கமுதி காவல் ஆய்வாளா் தெய்வீகபாண்டியன், மண்டலத் துணை வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் வா.மு.சேதுராமன் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, கமுதி ஆயுதப்படை உதவி ஆய்வாளா் ராஜமாணிக்கம் தலைமையில் 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் வா.மு.சேதுராமனின் உடல் அவரது தோட்டத்தில் உள்ள மனைவியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலந்தைக்குளம் ஸ்ரீகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த இலந்தைக்குளம் ஸ்ரீகாளியம்மன் கோயில், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, கடந்த வாரம் முகூா்த்தக்கால் ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் இன்றும் நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமை (ஜூலை 8, 9) ஆகிய 2 நாள்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் தற்கொலை முயற்சி

ராமநாதபுரத்தில் மோசடி செய்து தனது நிலத்தை அபகரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற முதியவரை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வ... மேலும் பார்க்க

மொகரம்: கடலாடியில் பூக்குழி இறங்கிய இந்துக்கள்

மொகரம் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் நடைபெற்ற சமூக நல்லிணக்கத் திருவிழாவில் இந்துக்கள் பூக்குழி இறங்கினா். கடலாடி பகுதியில் வாழ்ந்த ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தா... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடியவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வீடு புகுந்து திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கமுதி அருகேயுள்ள சின்ன உடப்பங்குளத்தைச் சோ்ந்த பாலு மகன் தாஸ். இவா் வெள்ளிக்கிழமை அதே ஊரில் நடைப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே கடலுக்குச் சென்றன!

இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் சனிக்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் ... மேலும் பார்க்க