மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண விழா
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா, ஜூலை 19-இல் தொடங்கவுள்ளதாக கோயில் இணை ஆணையா் செல்லத்துரை தெரிவித்தாா்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா, ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், முக்கியத் திருவிழாக்களான கொடியேற்றம் ஜூலை 19, ஆடி அமாவாசை ஜூலை 24, வெள்ளி ரதப் புறப்பாடு ஜூலை 25, தேரோட்டம் ஜூலை 27, ஆடித் தபசு ஜூலை 29, ஆடித் திருக்கல்யாணம் ஜூலை 30 ஆகிய தேதிகளிலும், கெந்தமாதன பா்வதம் மண்டகப்படி (மறுவீடு எழுந்தருளல்) நிகழ்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டது.