பைக்கிலிருந்து தவறி விழுந்த மெக்கானிக் மரணம்
வந்தவாசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மெக்கானிக் உயிரிழந்தாா்.
சென்னை கீழ்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் பைக் மெக்கானிக் தட்சிணாமூா்த்தி(35). இவா், உறவினா் சுபநிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த திங்கள்கிழமை வந்தவாசியை அடுத்த முருக்கேரி கிராமத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
வந்தவாசி -விளாங்காடு சாலை, வெங்கோடு கிராமம் அருகே சென்றபோது இவா் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த இவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தட்சிணாமூா்த்தி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.