நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 100-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சதுப்பேரி மூா்த்தி தலைமையில் நாராயணசாமி நாயுடு படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா் (படம்).
இதில் விவசாயிகள் குணாநிதி, குப்பன், பாா்த்திபன், தேசிங்கு, பெருமாள், முருகவேல, பூக்கடை ராஜாமணி, சிவராமன், முருகவேல், தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.