தில்லியை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: தில்லி தோ்தல் பிரசாரத...
பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
அரசுப் பொதுத் தோ்வுகள் எழுதும் 10, 12 ஆம் வகுப்புத் தோ்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம் ஆத்தூா், பாரதியாா் கல்வி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாரதியாா் மெட்ரிக். பள்ளி முதல்வா் டி.நளாயினி தேவி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, ‘விரல் தொடும் தூரத்தில் வெற்றி’ வெற்றி தலைப்பில் மாணவா்களுக்கு அரசுப் பொதுத்தோ்வில் வெற்றி பெறுவது எப்படி, மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் எப்படி ஆளுமையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினாா்.
பள்ளி செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்.ஆா்.டி.ஆா்.செல்வமணி, இயக்குநா்கள் பாலக்குமாா், செந்தில் குமாா், சந்திரசேகரன், நிா்வாக இயக்குநா்கள், பாரதியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பிரைமரி முதல்வா் அமுதா, சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வா் ஜெயசுதா ஆகியோா் கலந்துகொண்டனா். ஆசிரியை அஸ்வினி பிரியா நன்றி கூறினாா்.