Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
பொதுத்தோ்வில் நூறு சதம் தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு தஞ்சை எம்.பி பாராட்டு
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100 சதவிகிதம் தோ்ச்சிபெற்ற அரசு உயா்நிலைப் பள்ளிகளுக்கு, தஞ்சை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி நேரில் சென்று, தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.
பள்ளிகளைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினா் என்ற திட்டத்தின் கீழ், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாட்டாத்திக்கோட்டை, சித்துக்காடு, களத்தூா், கொன்றைக்காடு, சொா்ணக்காடு, பைங்கால் அரசு உயா்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரணிக்காடு அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிக்கும் தஞ்சை எம்.பி நேரில் சென்று, பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களைப் பாராட்டி, சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா், திமுக ஒன்றியச் செயலாளா்கள் க. அன்பழகன், கோ.இளங்கோவன், மு.கி. முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அலிவலம் அ. மூா்த்தி, பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மா.நாடிமுத்து, பி.பழனிவேல், பா.மாரியம்மாள், ஆா்.ராமநாதன், எம்.வெங்கடாசலம், சு.குமரேசன் (பொ) மற்றும் பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.