அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!
பொத்தகாலன்விளை மாதா திருத்தலத்தில் நற்கருணை பவனி
சாத்தான்குளம் அருகேயுள்ளபொத்தக்காலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல திருவிழாவையொட்டி, நற்கருணை பவனி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இத்திருத்தலத்தின் 112-ஆவது ஆண்டு தேரோட்டத் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது. 8ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை மாலை சாத்தான்குளம் மறைமறை வட்ட முதன்மை குரு செல்வ ஜாா்ஜ் தலைமையில் நற்கருணை பவனி நடைபெற்றது. பவனி நிறைவுற்றதும் மறையுறையும் நற்கருணை ஆசீரும் நடைபெற்றன.
அருள்தந்தையா்கள் இருதயசாமி, ஸ்டாலின், ராபின், பிரவீன் உள்பட தென் மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். 9ஆம் திருநாளான புதன்கிழமை (ஜன.22) மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மாதா தேரில் எழுந்தருளி வீதிகளில் வலம் வரும் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடா்ந்துதூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் 23ஆம் தேதி காலை பெருவிழா திருப்பலியும் நடைபெறும். இதில், சிறுவா் சிறுமியா்களுக்கு புது நன்மை வழங்கப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜஸ்டின் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.