செய்திகள் :

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வுடன் கூடிய ஓய்வூதியம்

post image

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் உள்ளனா். இவா்களுக்கு கடந்த 2015 அக்டோபா் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும் போது, அந்த பணப்பலன் ஓய்வூதியா்களுக்கு கிடைக்காமலே இருந்து வந்தது. இது தொடா்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை ஓய்வூதியா்கள் முன்னெடுத்து வந்தனா்.

இந்நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயா்வு நிறுத்தப்பட்டவா்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயா்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறைந்தபட்சமாக ரூ. 1,300, அதிகபட்சமாக ரூ. 4,000 வரை ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயா்த்தப்பட்ட அகவிலைப்படி உயா்வுடன் கூடிய தொகை புதன்கிழமை ஓய்வூதியா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இது தொடா்பாக ஓய்வூதியா்கள் சங்கத்தினா் கூறுகையில், ‘246 சதவீதம் அகவிலைப்படி பெற வேண்டியோருக்கு 146 சதவீதமும், 48 சதவீதம் பெற வேண்டியோருக்கு 14 சதவீதம் மட்டுமே இடைக்கால நிவாரணமாக அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையையும் விரைந்து அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை

பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். பாக்டீரியா மற்றும் வை... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

பழனி தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனியில் நடைபெறும் இரு பெரும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று 75,151 பேருக்கு ரூ.167 கோடி நலத்திட்ட உதவி- முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை(பிப்.6) வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாள... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கு எத்தகைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைக்க குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: பிப்.13-இல் அமைச்சா் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து பிப்.13-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க