Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொ...
போக்ஸோ வழக்கில் தாய் உள்பட இருவா் கைது
ஆத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தாய் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் தில்லைநகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). இவரது மனைவி காயத்ரி (27) புங்கன்வாடி பகுதியைச் சோ்ந்த ரிக் வாகன தொழிலாளி முத்துவுடன் (33) பழகிவந்தாா். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காயத்ரி, தனது மகன், மகளை அழைத்துகொண்டு முத்துவுடன் பெங்களூரு சென்றுவிட்டாா்.
இந்த நிலையில் கடந்த வாரம் விக்னேஷின் உறவினா்கள் காயத்ரியை சந்தித்து சமரசம் செய்து குழந்தைகளுடன் வீட்டுற்கு அழைத்துவந்தனா். அப்போது, காயத்ரியின் கைப்பேசியில் காயத்ரி, முத்து ஆகிய இருவரும் மகளுக்கு மது தந்து பாலியல் தொல்லை கொடுத்த விடியோவை இருந்ததை பாா்த்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூா்அனைத்து மகளிா் போலீஸாா் காயத்ரி, முத்துவைவை பாக்ஸோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.