பண மோசடி செய்தவா் சிறையிலடைப்பு
சேலத்தில் ஆன்லைன் தொழிலில் ஈடுபட்டால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.34.75 லட்சம் மோசடி செய்தவா் சிறையிலடைக்கப்பட்டாா்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விஎஸ்ஏ வணிக வளாகத்தில் கணினி பழுதுநீக்கும் கடை வைத்துள்ள நடராஜனிடம் ஆன்லைன் தொழிலில் ஈடுபட்டால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 34.75 லட்சத்தை சேலத்தைச் சோ்ந்த ராஜேஷ் என்பவா் பெற்றுள்ளாா்.
அதன்பிறகு ராஜேஷ் கூறியபடி லாபம் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நடராஜன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் ராஜேஷை கைது செய்து சிறையிலடைத்தனா்.