‘நான் முதல்வன்’ திட்டத்தால் 41 லட்சம் மாணவா்கள் பயன்: தமிழக அரசு தகவல்
கோட்டை மாரியம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்: இன்று மின் விநியோகம் நிறுத்தம்
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அப் பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சுமதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள பகுதி முதல் அக்ரஹாரம், ஆனந்தா இறக்கம், லட்சுமிநரசிம்ம சாமி கோவில், 2 ஆவது அக்ரஹாரம், வரதராஜபெருமாள் கோயில், சின்னக்கடைவீதி, பெரியக்கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் இறக்கம், கடைவீதி மற்றும் டவுன் நகர காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் ஜூலை 7 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.