கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?
போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை
நாகா்கோவில் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தது தொடா்பாக போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி நவஜீவன்நகரைச் சோ்ந்த பீட்டா் மகன் தனிஷ்லாஸ்(57). இவா், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான வழக்கில் சுசீந்திரம் போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, தனிஷ்லாஸுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.