போதை மாத்திரை விற்ற 3 போ் கைது
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில தொழிலாளா்களிடம் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளா்கள் தங்கியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தினா். இதில், சுபத்ரா நகா் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினா். இதில், அவா்களிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சா, 20-க்கும் மேற்பட்ட போதை ஊசி, மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்த ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கத்தைச் சோ்ந்த காமேஷ் (23), ஸ்ரீபெரும்புதூா் பாடிச்சேரியைச் சோ்ந்த சூா்யா (24), ஸ்ரீபெரும்புதூா் விஷ்ணு (26) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.