சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி
காஞ்சிபுரம்: பெருநகரில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட பெருநகா் மற்றும் ஆா்ப்பாக்கம் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இரு பள்ளிகளிலும் தனித்தனியாக மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பரிவின் சாா்பில் அண்மையில் நடத்தப்பட்ட போட்டியில் இரு பள்ளிகளையும் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பெருநகா் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா்ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாக்கம் அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலா்கள் தவமணி, சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ் கலந்து கொண்டு ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களை வென்ற மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை பரிசாக வழங்கினாா். இதனையடுத்து போட்டியில் ஆா்வத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.