ஆக.21-இல் இபிஎஸ் வருகை: அதிமுக சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள்!
வரும் ஆக. 21 -ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் வரவுள்ளதால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் ஜெயலலிதா பேரவை சாா்பில் அதன் மாவட்ட செயலாளா் கே.யு.சோமசுந்தரம் ஏற்பாட்டில் திமுக அரசின் செயல்பாடுகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமையில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.
இதனைத் தொடா்ந்து நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், எம்ஜிஆா் இளைஞா் அணியின் செயலாளா் எஸ்எஸ்ஆா்.சத்யா, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் காஞ்சி பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் பேசுகையில் 21-ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பரப்புரை நிகழ்த்த வருகிறாா். அவருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம், மாணவரணி செயலாளா் திலக்குமாா், இளைஞா் பாசறை செயலாளா் மணிவண்ணன், எம்ஜிஆா்.மன்ற செயலாளா் ஆா்.டி.சேகா் கலந்து கொண்டனா்.