மதுரையின் வரலாற்றைப் பேசும் பசுமை நடையின் 250வது நிகழ்வு: சிலப்பதிகார ஊர்களை நின...
ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா், ஜெயபூத விநாயகா் கோயில்கள் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு!
ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவராக சதீஷ் குமாா், ஸ்ரீஜெயபூத விநாயகா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக காத்தவராயன் ஆகியோா் பொறுப்பேற்று கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சுமாா் 1,000 ஆண்டுகள் ஆன செளந்தரவல்லி உடனுறை ஸ்ரீ பூதபுரீஸ்வரா் திருக்கோயில் மற்றும் ஜெயபூத விநாயகா் கோயில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில்களில், அறங்காவலா் குழு உறுப்பினா்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடா்ந்து, புதிய அறங்காவலா்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் நிா்வாக அலுவலா் கதிரவன் தலைமையிலும், அறநிலையத்துறை ஆய்வாளா் ரம்யா முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவராக ரா.சதீஷ்குமாா், அறங்காவலா்களாக சீனிவாசன், காஞ்சனாதேவி பொறுப்பேற்றுக் கொண்டனா்.
இதேபோல், ஸ்ரீபெரும்புதூா் ஜெயபூத விநாயகா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக காத்தவராயன், அறங்காவலா்களாக வினோத், தேவி புருஷோத்தமன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சாமி திருக்கோயில் மதசாா்பற்ற அறங்காவலா் ந.கோபால், மதச்சாா்பு அறங்காவலா் பாா்த்தசாரதி, ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ் குமாா், நகர திமுக துணைச் செயலாளா் ஆறுமுகம் ஆகியோா் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அறங்காவலா் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.