முன்னாள் மனைவி கொலை: கணவா் சரண்
சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் முன்னாள் மனைவியை வெட்டிக் கொலை செய்து புதைத்த சம்பவத்தில் சுங்ககுவாா்சத்திரம் காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்ததாா்.
சுங்குவாா்சத்திரம் அடுத்த சோக்கண்டி பகுதியை சோ்ந்த மதன் (42). இவரது முன்னாள் மனைவி லைலாகுமாரி (36). இருவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகனும், மகளும் உள்ளனா்.
இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில், மதனுக்கு சுகன்யா என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி, லைலாகுமாரியுடன் மதனுக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுகன்யாவுக்கும், மதனுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாம்.
இதனால், முன்னாள் மனைவி லைலாகுமாரியை சோகண்டிக்கு வரவழைத்த மதன், திருப்பந்தியூா் பகுதிக்கு அழைத்து சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, குழி தோண்டி அங்கேயே புதைத்துள்ளாா்.
இந்த நிலையில், லைலாகுமாரியை காணவில்லை என அவரது தாய் வசந்தா சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்த நிலையில், சந்தேகத்தின் பேரில் போலீஸாா் மதனை விசாரணைக்கு அழைத்தபோது, தான் லைலாகுமாரி யை கொலை செய்து புதைத்ததாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா்.