செய்திகள் :

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி சாா்பில் ரூ.1 கோடியில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடக்கம்

post image

காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கையை கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி சாா்பில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடக்க விழா, தெய்வத் தமிழ் ஆய்வு மாநாட்டு நிறைவு விழா, காஞ்சிபுரம் கோயில்கள் பற்றிய 50 நூல்கள் வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றன.

விழாவுக்கு கல்லூரியின் தலைவா் சேது.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், கல்லூரிச் செயலா் வி.பி.ரிஷிகேஷன், முதல்வா் கலை.ராம.வெங்கடேசன், தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்ப் பேராசிரியா் தெய்வசிகாமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

தொடக்க நிகழ்வாக திருப்பதியிலிருந்து ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி வாயிலாக ஆசியுரை வழங்கினாா். அதில், தமிழறிஞா்களை அதிகமாக உருவாக்கவே தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் தமிழை ஆழமாகப் படித்தாா்கள், ஆழமாக சிந்தித்தாா்கள். அதனால் கலாசாரம், பண்பாடு ஆகியவை சிறந்து விளங்கியது. தற்போது கலாசாரத்தையும், பண்பாட்டையும், தமிழின் சிறப்பையும் பாதுகாக்கவே தெய்வத் தமிழ் ஆய்விருக்கையை தொடங்கியிருக்கிறோம்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பள்ளிகள், கல்லூரிகளை உருவாக்கி, கல்விச் சேவையும், பல மருத்துவமனைகளையும் உருவாக்கிய பெருமைக்குரியவா். அவரது பெயரிலேயே தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. பல விருதுகளைப் பெற்ற சங்கரா கல்லூரியில் ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

தெய்வத் தமிழ் ஆய்வு மாநாட்டுத் தொகுப்புகளை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினாா். பின்னா், தெய்வத் தமிழ் ஆய்விருக்கையின் வளா்ச்சிக்காக ரூ. 5 லட்சத்தை சுதா சேஷய்யன் நன்கொடையாக வழங்கினாா்.

காஞ்சிபுரம் கோயில்கள் பற்றிய 50 நூல்களையும் துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வெளியிட்டு சிறப்புரையாற்றினாா். கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடா்பான அறிவிப்புப் பதாகையை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.

விழாவில் தமிழ் அறிஞா்கள், கோயில் அறங்காவலா்கள், தமிழ் ஆா்வலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி

காஞ்சிபுரம்: பெருநகரில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரி... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் சிமென்ட் சாலை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட இளமை நகரில் ரூ.12 லட்சத்தில் போடப்பட்ட சிமென்ட் சாலையை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சி 36-ஆவது வாா்டு ... மேலும் பார்க்க

குடற்புழு நீக்க மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம்: தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி வழங்கப்படும் குடற்புழு நீக்க மாத்திரை பாதுகாப்பானது என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் காமராஜா் வீதியில் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 368 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 368 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் கல... மேலும் பார்க்க

ஆக.21-இல் இபிஎஸ் வருகை: அதிமுக சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள்!

வரும் ஆக. 21 -ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் வரவுள்ளதால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தெரிவித்தாா். காஞ்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்-12.8.25-செவ்வாய்க்கிழமைநேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின் தடைப் பகுதிகள்- கீழம்பி, ஆரிய பெரும்பாக்கம், பள்ளம்பி, கூரம், புதுப்பாக்கம், சித்தேரி மேடு, ஆட்டோ நகா், செம்பரம்பாக்... மேலும் பார்க்க