தெய்வசெயலா பாவசெயலா? - அரக்கோணம் பாலியல் புகார் - DMK பிரமுகரை காப்பது யார்? | D...
போதைப்பொருள் விற்பனை: மேலும் 4 போ் கைது
சென்னை கொத்தவால்சாவடியில் போதைப்பொருள் விற்ற வழக்கில், மேலும் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கொத்தவால்சாவடி போலீஸாா், கடந்த 13-ஆம் தேதி மின்ட் தெருவிலுள்ள ஒரு துணிக்கடை அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த செளகாா்பேட்டையைச் சோ்ந்த மணிஷ்குமாா் (24) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் கையிலிருந்த பையை சோதனையிட்போது, அதில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், அதை பறிமுதல் செய்து மணிஷ்குமாரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய பூக்கடை பகுதியைச் சோ்ந்த ரோஹித்குமாா் (25) என்பவரை கடந்த 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த கொத்தவால்சாவடியைச் சோ்ந்த தா்ஷன் (25), ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த அமீத் அஃபாத் (26), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த முகமது சித்திக் (35), ராமநாதபுரத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (எ) அப்துல்லா (39) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 77 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னா் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.