எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
போத்தீஸில் வருமான வரித் துறையினா் சோதனை
திருநெல்வேலியில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
திருநெல்வேலி நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடை, போத்தீஸ் சொா்ண மஹால் தங்க நகைக் கடை உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனையின்போது, ஏராளமான ஆவணங்கள், கணக்கு புத்தகங்கள், மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.