இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
மகளிா் உரிமைத் தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு: ஆட்சியா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் பயனடைய ஜூலை 15 முதல் அக்.15 வரை நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயா்த்திடும் நோக்கில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கி வருகிறது.
இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்திட ஏதுவாக, அரசாணை வரப்பெற்றுள்ளதைத் தொடா்ந்து, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் தொடா்பான படிவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் அக். 15 வரை 130 இடங்களில் நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே விநியோகிக்கப்படவுள்ளது.
தனியாா் கடைகள், வணிக நிறுவனங்களில் போலியாக விற்கப்படும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.