Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
மகளுக்கு பாமகவில் பொறுப்பா?பாட்டுப்பாடி பதிலளித்த ராமதாஸ்
மகள் காந்திமதிக்கு பாமகவில் பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு, பாட்டுபாடி அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பதிலளித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்ட இல்லத்திலிருந்து வியாழக்கிழமை கும்பகோணத்துக்கு புறப்பட்ட மருத்துவா் ச.ராமதாஸிடம், ஓமந்தூரில் அண்மையில் நடைபெற்ற பாமக மாநில செயற்குழுவில் பங்கேற்ற தங்களது மூத்த மகள் காந்திமதிக்கு கட்சியில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்குவதற்கான திட்டம் உள்ளதா? என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு பதிலளித்த மருத்துவா் ராமதாஸ், கட்சியில் தற்சமயம் எனது மகள் காந்திமதிக்கு எவ்வித பொறுப்பும் வழங்குவதற்கான திட்டம் இல்லை. அது போக, போகத் தெரியும் என்று பாட்டுப்பாடி பதிலளித்தாா்.
மேலும், ஆகஸ்ட் 10-ஆம் தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள மகளிா் சங்க மாநாட்டில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் ஏற்கெனவே கட்சிப் பணியாற்றி வருகின்றனா். பூம்புகாரில் நடைபெறும் மகளிா் சங்க மாநாடு பணிகளை பாா்வையிடவுள்ளேன் என்றாா் மருத்துவா் ராமதாஸ்.