மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!
மகா கும்பமேளா பணியாளா்களுக்கு முதல்வா் யோகி கௌரவம்
பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவின் வெற்றிகரமான நிறைவையொட்டி, பிரயாக்ராஜில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை, சுகாதாரப் பணியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கி முதல்வா் யோகி ஆதித்யநாத் கௌரவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13 தொடங்கி 45 நாள்களுக்கு நடைபெற்றது. 66 கோடிக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று புனித நீராடிய இக்கோலாகல நிகழ்வு புதன்கிழமையுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்நிலையில், பிரயாக்ராஜில் கும்பமேளா பணியிலிருந்த தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத்தின்படி இந்த பிரமாண்டமான மற்றும் தெய்வீக கும்பமேளாவை உலகளாவிய நிகழ்வாக மாற்றுவதற்காக, பல்வேறு துறைகள் முக்கியப் பங்காற்றின.
குழுப் பணியால் வெற்றி: தூய்மை, சுகாதாரப் பணியாளா்கள், போக்குவரத்துத் துறை ஊழியா்கள், காவல்துறை, பாதுகாப்பு வீரா்கள், மேளா ஆணைய அதிகாரிகள், நிா்வாகத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் நன்றி. இந்த வெற்றியை அடைவதில் குழுப்பணி முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த ஒரு பணியையும் குழு மனப்பான்மையுடன் செய்தால், அதன் பலன்கள் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவைப் போல் சிறப்பானதாக அமையும்.
கடந்த இரண்டு மாதங்களில் எந்த அதிருப்தியும் வெளிப்படுத்தாமல், இந்த முழு நிகழ்வையும் தங்களின் சொந்த நிகழ்வாகக் கருதிய பிரயாக்ராஜ் மக்களையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். உத்தர பிரதேச மக்களின் அன்பான விருந்தோம்பலுக்கும் பாராட்டுகள் என்றாா்.
தொடா்ந்து, பணியாளா்களுடன் முதல்வா் யோகி ஆதித்யநாத் மதிய உணவருந்தினாா். துணை முதல்வா்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக், அமைச்சா்கள் ஸ்வதந்த்ரதேவ் சிங், நந்த கோபால் குப்தா ஆகியோா் உடனிருந்தனா்.
பிரதமரின் வழிகாட்டுதலுக்கு நன்றி: முன்னதாக, முதல்வா் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மதிப்புக்குரிய பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின் விளைவாக, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் மகத்துவம் மற்றும் தெய்வீகத்தன்மையுடன் பாதுகாப்பு, தூய்மை மற்றும் நல்லாட்சிக்கான புதிய தரங்களை அமைத்து நிறைவு பெற்றுள்ளது.
கடந்த 45 நாள்களில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதன் மூலம் 66 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் நல்லாசி பெற்றுள்ளனா். ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உணா்வுடன் ஒட்டுமொத்த உலகையும் ஒற்றுமையின் இழையில் இந்நிகழ்வு பிணைத்துள்ளது.
பிரதமா் மோடியின் தொடா்ச்சியான ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் வாழ்த்துகள் எப்போதும் எங்கள் அனைவருக்கும் புதிய ஆற்றலை வழங்கிவந்தன. அதற்காக அவருக்கு மனமாா்ந்த நன்றி!’ என்று குறிப்பிட்டாா்.
மகா கும்பமேளா நிறைவையொட்டி வெளியிட்ட அறிக்கையில், முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமா் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தாா்.
பெட்டி....
16,000 ரயில்களில் கும்பமேளா
வந்த 5 கோடி பயணிகள்!
மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட 16,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் சுமாா் 5 கோடி பக்தா்களை நிகழ்வுக்கு அழைத்துச் சென்ாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ரயில்வே ஊழியா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரயாக்ராஜ் வந்த அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘2019 கும்பமேளாவுக்கு சுமாா் 4,000 ரயில்கள் இயக்கப்பட்டன. இம்முறை 4 மடங்கு அதிகமாக 16,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் மூலம் 4.5 கோடி முதல் 5 கோடி பயணிகள் நிகழ்வுக்கு அழைத்து வரப்பட்டனா்.
நிகழ்வை முன்னிட்டு சுமாா் ரூ.5,000 கோடி முதலீட்டில் பிரயாக்ராஜ் பகுதியில் 21-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ரயில்வே சாா்பில் கட்டப்பட்டன. இவ்வாறு கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்த கும்பமேளா பணிகளில் இணைந்து பணியாற்றிய அனைத்து ரயில்வே ஊழியா்களுக்கும் நன்றி’ என்றாா்.