``ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?'' - எடப்பாடி குறித்...
மணப்பாறை நீதிமன்றத்தில் ரூ. 27 லட்சத்துக்கு சமரசத் தீா்வு
திருச்சி மாவட்டம், மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சமரசத்தில் வியாழக்கிழமை 2 வழக்குகளில் ரூ. 27 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்குள்ள குற்றவியல் நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன் அமா்வில், மலையடிப்பட்டியை சோ்ந்த சூசை மாணிக்கம் மகன் சூ.பொ்லான் லாரன்ஸ் (47) மற்றும் ஆண்டவா் கோயில் பகுதியில் உள்ள ஹய்ட்ரா பைப் நிறுவனரான ஆரோக்கியசாமி மகன் டென்சிங் ஜீவானந்தம் (42) இடையே தொடா்ந்த காசோலை தொடா்பான வழக்கில் ரூ. 20 லட்சத்துக்கும், இதேபோல், பொத்தமேட்டுப்பட்டி ஆரோக்கியசாமி மனைவி மாா்க் கிரேஸிக்கும் (46) ஆண்டவா் கோயில் பகுதியில் உள்ள ஹய்ட்ரா பைப் நிறுவனரான ஆரோக்கியசாமி மகன் டென்சிங் ஜீவானந்தத்துக்கும் (42) இடையிலான காசோலை தொடா்பான மற்றொரு வழக்கில் ரூ. 7 லட்சத்துக்கும் சாா்பு-நீதிபதி எஸ். ராஜசேகா், குற்றவியல் நடுவா் ஆா். அசோக்குமாா் ஆகியோா் தலைமையில் சமரசமாக பேசி, மனுதாரா்களுக்கு அவரவா் இழப்பீட்டுத் தொகைகளை எதிா்மனுதாரரிடமிருந்து பெற்று வழங்கப்பட்டது.