சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு
மணிப்பூரில் தொடர் நிலநடுக்கம்!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தின் இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் இன்று (மே 28) அதிகாலை முதல் 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அதிகாலை 1.54 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளது. அதன் பின்னர், நோனே மாவட்டத்தில் அதிகாலை 2.26 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காலை 10.23 மணியளவில் மீண்டும் சூராசந்திரப்பூரில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தொடர் நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிக்க:சண்டிகரில் கரோனாவுக்கு ஒருவர் பலி!