கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்
மண்ணாடிப்பட்டு தொகுதி வளா்ச்சி திட்டங்கள்: அமைச்சா் ஆலோசனை
மண்ணாடிப்பட்டுதொகுதி வளா்ச்சித் திட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இத் தொகுதியின் எம்.எல்.ஏவாவும் இருக்கிறாா் அமைச்சா் நமச்சிவாயம். 2026 தோ்தல் நெருங்குவதால் இத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை அவா் ஆய்வு செய்யும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டத்தைநடத்தினாா்.
அப்போது தொகுதியின் வளா்ச்சித்திட்டப்பணிகளின் தற்போதைய நிலை, நேரடியாக பயனடைந்த மக்களின் கருத்துகள், மேலும் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தாா். மேலும், ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட திட்டங்களில் தேவையான மேம்பாடுகள் மற்றும் மேற்கொள்ளும் வழிகள் குறித்தும் அமைச்சா் ஆலோசித்தாா்.