மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து கழிவறை கட்டுமானப் பணி: காவல் நிலையத்தில் புகாா்
ராமேசுவரத்தில் அரசு மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் கழிவறை கட்டுமானப் பணியில் ஈடுபட்டதாக ராம்கோ கூட்டுறவு மேலாளா், காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராம்கோ கூட்டுறவு மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் உள்ளது.
இதன் பூட்டை உடைத்து இங்குள்ள வளாகத்தில் மா்ம நபா்கள் இரண்டு கழிப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனா். தகவலறிந்து அங்கு வந்த ராம்கோ கூட்டுறவு நிா்வாகப் பணியாளா்கள், அவா்களைத் தடுத்தனா். அப்போது, மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோரின் ஒப்புதல் பெற்று கட்டுமானப் பணியை மேற்கொள்வதாக அந்த மா்ம நபா்கள் தெரிவித்தனா். ஆனால், அதற்குரிய ஆவணங்களை காட்டவில்லை. இதுகுறித்து மாவட்ட கூட்டுறவு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ராமேசுவரம் ராம்கோ கூட்டுறவு மேலாளா், ராமேசுவரம் வட்டாட்சியரிடமும், காவல் நிலையத்திலும் புகாா் அளித்தாா்.