ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடகத்துடன் பாடம் கற்பித்த ஆர்ஜென்டீனா!
மதுபானக் கூடம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு
திருப்பூா், சின்னாண்டிபாளையம் குளம் அருகே தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் -மங்கலம் சாலை சுல்தான்பேட்டையை அடுத்த இந்திரா காலனி பகுதியில் தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சின்னாண்டிபாளையம் குளத்துக்கு மிகவும் அருகில் மதுபானக் கூடம் அமையவுள்ளது. இந்தப் பகுதியில் மதுபானக் கூடம் அமைத்தால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கும், பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். ஆகவே, தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.