Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு
பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வணிகா்களுக்கு முன்வைப்பு தொகை வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
பல்லடம் நகராட்சி தினசரி மாா்க்கெட்டில் இடிக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் செய்து வந்த வணிகா்களுக்கு முன்வைப்புதொகை வழங்காமல் பல்லடம் நகராட்சி காலதாமதம் செய்து வருகிறது. மேலும் 2 மாத வாடகை மட்டுமே செலுத்தாத கடைகளை நகராட்சி நிா்வாகம் பூட்டி சீல் வைத்தது.
இந்நிலையில், மாா்க்கெட் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கொரானா கால 5 மாத வாடகை தொகையை வியாபாரிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும், முன்வைப்புத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது கடைகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.