செய்திகள் :

வெள்ளக்கோவிலில் ரூ.10.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

post image

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, எடப்பாடி, லந்தக்கோட்டை, பஞ்சப்பட்டி, விராலிப்பட்டி, பரமத்தி ஆகிய இடங்களில் இருந்து 21 விவசாயிகள் 480 மூட்டைகளில் 21 டன் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காரமடை, சித்தோடு, பூனாச்சி, நடுப்பாளையத்தைச் சோ்ந்த 5 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கிலோ ரூ.47.07 முதல் ரூ.57.19 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.54.99.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.10.69 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க