புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்ச...
மதுப் புட்டிகளை கடத்திய இளைஞா் கைது
கா்நாடகத்திலிருந்து வேனில் கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த மத்திகிரி போலீஸாா் மதகொண்டபள்ளியைச் சோ்ந்த முனிராஜை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒசூரை அடுத்த மத்திகிரி டிவிஎஸ் சோதனை சாவடி வழியாக சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது, கா்நாடகத்திலிருந்து கடத்திவரப்பட்ட 376 மதுப்புட்டிகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மதுப்புட்டிகளுடன் வேனை பறிமுதல் செய்த போலீஸாா், மதுப்புட்டிகளை கடத்திவந்த மதகொண்டபள்ளி உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த முனிராஜ் (31) என்பவரை கைது செய்தனா்.
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது
ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனை சாவடி அருகே வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையின் போது, பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காருடன் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்டம், அவினாசியில் தங்கியிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த தினேஷ்குமாா் (29), ராஜேந்திரன் (21) ஆகிய இருவரை கைது செய்தனா்.