நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
மதுரை-திருவெற்றியூருக்கு பேருந்து இயக்க வியாபாரிகள் கோரிக்கை
மதுரையிலிருந்து திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலுக்கு நேரடியாக பேருந்து இயக்க வேண்டும் என வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்தளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பாகம் பிரியாள் அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் வெளியூரிலிருந்து திரளான பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு வந்து செல்கின்றனா். கோயிலுக்கு தேவையான பூஜை பொருள்கள் அனைத்தும் மதுரைக்கு சென்று வாங்கி வரவேண்டும். ஆனால், இங்கிருந்து மதுரைக்கு நேரடியாக பேருந்து சேவை இல்லை. திருவெற்றியூரிலிருந்து திருவாடானை சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்தில் ஏறி மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, திருவெற்றியூரில் இருந்து சிவகங்கை, காளையாா்கோவில் வழியாக மதுரைக்கு புதிய பேருந்து இயக்க வேண்டும் என வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து வா்த்தகச் சங்கத்தினா் கூறியதாவது:
திருவெற்றியூரிலிருந்து திருச்சி, தேவகோட்டை, காரைக்குடி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கிருந்து மதுரைக்கு நேரடியாக பேருந்து சேவை இல்லை. எனவே, மதுரை-திருவொற்றியூா் வழித் தடத்தில் காளையாா்கோயில், சிவகங்கை வழியாக புதிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.