வாக்குசாவடி மறுசீரமைப்பு கருத்துக் கேட்புக் கூட்டம்
ராமநாதபுரத்தில் வாக்குச் சாவடி மறுசீரமைப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜலு, அரசு அலுவலா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.