செய்திகள் :

மத்திய உள்துறைச் செயலரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு

post image

மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகனின் பதவிக்காலத்தை 2026, ஆக.22 வரை நீட்டித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மத்திய உள்துறைச் செயலராக இருந்த அஜய் பல்லா கடந்த ஆண்டு ஆக.22-இல் பணி ஓய்வுபெற்றதையடுத்து அந்தப் பதவிக்கு கோவிந்த் மோகன் நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புடன் கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பு 2027-இல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல் 2026, மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் இந்தியாவில் முழுவதுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் சூளுரைத்துள்ளாா். இந்தச் சூழலில் கோவிந்த் மோகனின் பதவிக்காலத்தை 2026, ஆக.22 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் வழங்கியது. இதற்கான ஆணையை மத்திய பணியாளா்அமைச்சகம் பிறப்பித்தது.

இதன்மூலம் மத்திய உள்துறைச் செயலராக கோவிந்த் மோகன் 2 ஆண்டுகள் பதவி வகிக்கவுள்ளாா்.

1989, சிக்கிம் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் உள்துறைச் செயலராக பதவியேற்கும் முன் மத்திய கலாசார செயலராக பதவி வகித்தாா்.

கரோனா பெருந்தொற்றின்போது மாநிலங்களின் நிலவரங்களைக் கண்காணிப்பதில் மத்திய அரசின் முக்கிய அதிகாரியாக கோவிந்த் மோகன் திகழ்ந்தாா்.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க