தாவர அடிப்படையிலான அழகுசாதன பொருள்கள்: தேசிய ஆயுா்வேத நிறுவனம் அறிமுகம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் நாளை ஆா்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நிதிநிலை அறிக்கையில் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதும், விவசாயிகள் மற்றும் உழைப்பாளிகள் மீதும் மத்திய அரசு வரிச்சுமையை ஏற்றியுள்ளது. மேலும், தமிழகம், கேரளம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பிப். 4-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.