செய்திகள் :

மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு: தமிழகத்தில் இருமல் மருந்து விற்பனைக்கு தடை

post image

மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்ததற்கு காரணமாகக் கூறப்படும் ‘கோல்ட்ரிஃப்’ என்ற இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது.

அதேபோன்று மறு உத்தரவு வரும் வரை காஞ்சிபுரத்தில் செயல்படும் அதன் உற்பத்தி நிறுவனத்திலிருந்து அந்த மருந்துகளை வேறு எங்கும் விநியோகிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாள்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இருவேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டைஎத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது. பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பல்துறை விசாரணைக் குழுவை மத்திய அரசும், மத்திய பிரதேச அரசுகளும் அமைத்துள்ளன. இதனிடையே, மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமாா் மௌரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.

அதில், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மாவில் தயாரிக்கப்பட்ட (13 பேட்ச்) ‘கோல்ட்ரிஃப்’ மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குருபாரதி தலைமையிலான குழுவினா், கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். அங்கிருந்து அதே பேட்சில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ உள்பட 5 மருந்துகளை ஆய்வுக்காக எடுத்து வந்துள்ளனா்.

அதுமட்டுமல்லாது மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒடிஸா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ‘கோல்ட்ரிஃப்’ மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடா்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றொரு மருந்தான நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து தமிழகத்தில் ஏற்கெனவே விற்பனையில் இல்லை என எஸ்.குருபாரதி தெரிவித்துள்ளாா்.

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டல கூடுதல் பொதுமேலாளா் பி.மகேஷ் தெரிவித்தாா். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘தூய்மை இந்தியா’ திட்ட... மேலும் பார்க்க

ரூ.127 கோடியில் மேம்படுத்தப்படும் ‘சென்னை பஸ்’ செயலி

‘சென்னை பஸ்’ செயலியை ரூ.127 கோடியில் கூடுதல் வசதிகளுடன் மாநகா் போக்குவரத்துக்கழகம் மேம்படுத்தி வருகிறது. சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3,400-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கரூா் போன்று மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் தடுக்க, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்... மேலும் பார்க்க

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 13 மாவட்டங்களுக்கும் இந்த இரு நாள்களுக்கு, ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பருவமழைக்கு முன் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

பருவ மழைக்கு முன்பாக, கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி 1-ஆவது மண்டலத் தலைவா் வே.கருணாநிதி வலியுறுத்தினாா். தாம்பரம் மாநகராட்சி 1 -ஆவது ம... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு

சென்னை மயிலாப்பூரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞா்கள் சிலா் புதன... மேலும் பார்க்க