அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. ந...
மன்னா் கல்லூரியில் ரூ. 6 கோடியில் கட்டப்பட்ட மின் நூலகம் திறப்பு
புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரி வளாகதத்தில் ரூ. 6 கோடியில் கட்டப்பட்ட மின் நூலகத்தை சென்னையிலிருந்து முதல்வா் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில், 2314.50 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ. 6 கோடியில் தரை மற்றும் முதல் தளத்துடன் மின் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த மின் நூலகத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
மன்னா் கல்லூரி வளாகத்தில், புதிய மின் நூலகத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா குத்துவிளக்கேற்றி வைத்தாா். நிகழ்ச்சியில், மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி, மன்னா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தரை மற்றும் முதல் தளத்துடன் அமைந்துள்ள இந்த மின் நூலகத்தில், வாசிப்பறைகள், நூல்கள் வைப்பறை, நூலகா் மற்றும் உதவி நூலகா் அறைகள், அலுவலக அறை, பொருள்கள் வைப்பறை, ஆய்வுவிவாத அறை, மாணவா் குழு அறை, மின் நூலக அறை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.