மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் ...
மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் திருவள்ளுவா் சிலை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட 25-ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அரசு அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக, அரசு உத்தரவுப்படி, அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலும் திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டது. இச்சிலைக்கு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ந. உமாமகேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.