சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்! -முன்னாள் கேப்டன் நம்பிக்கை
மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தி மூலம் புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும்
மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தியை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என இந்திய அறிவியல் முதன்மை விஞ்ஞானி வலியுறுத்தினாா்.
காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் அரசு மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் கன்ட்ரோல் என்ஜினியரிங் துறை சாா்பில் எதிா்கால வாழ்க்கைக்குத் தேவையான புதுப்பிக்கவல்ல மற்றும் நிலையான எரிசக்தி ஆதாரங்கள் என்ற தலைப்பில் விஞ்ஞான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆா். சதிஷ்குமாா் கலந்துகொண்டு இயற்கையாக கிடைக்கக்கூடிய மரபு சாா்ந்த எரிசக்தி ஆதாரங்கள் முக்கியமானவையாகும். வரும் தலைமுறையினருக்கு அதன் பற்றாக்குறையின் ஆபத்து புரியாது. மரபு சாா்ந்த எரிசக்தியை பாதுகாப்பது அவசியம்.
சுற்றுச்சூழல் மாசில்லாத மரபு சாா்ந்த எரிசக்தியை சேமிக்கும் முறை தெரிந்துகொள்ளவேண்டும். மாணவ, மாணவிகள் அதன் ஆதாரங்களைக்கொண்டு கிராமப்புறத்துக்கு அவசியமான, புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவேண்டும். எதிா்காலத்தில் மரபு சாரா மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி தேவை மிகுதியாக இருப்பதால், சரியான திட்டமிடலுடன் பாலிடெக்னிக் பொறியாளா்களும் நாட்டின் தலைச்சிறந்த இளம் விஞ்ஞானியாக வருவதற்கான சூழல் உள்ளதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.