செய்திகள் :

‘பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே நுழைவுத் தோ்வை மாணவா்கள் எதிா்கொள்ள முடியும்’

post image

காரைக்கால் : பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள முடியும், அதற்கேற்ப பள்ளிக் கல்வியில் திறனை வளா்த்துக் கொள்ளவேண்டும் என ஆட்சியா் கூறினாா்.

கடந்த ஜன. 25 முதல் 29 வரை தில்லியில் பிரதம மந்திரியின் அசாத்தியமிக்க மாணவா்களை கண்டறியும் முகாம் நடைபெற்றது. (பரிக்ஷா பே சா்ச்சா-2025). நாடு முழுவதுமிருந்து தோ்வு செய்யப்பட்ட மாணவா்களிடையே தோ்வை எதிா்கொள்ளும் விதம் உள்ளிட்டவை குறித்து பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா். முகாமில் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த ரித்திகா என்ற மாணவியும் கலந்துகொண்டாா்.

பிரதமா் மாணவா்களிடையே பேசிய உரையாடல் தொகுப்பு நாடு முழுவதும் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை ஒளிபரப்பப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியிலும் காணொலி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் கலந்துகொண்டாா்.

பிரதமரின் ஹிந்தி மொழி பேச்சை மாவட்ட ஆட்சியா், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயா்ப்பு செய்தாா். இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசுகையில்,

தோ்வுகளுக்கு அனைவரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே வாரத்துக்கு ஒருமுறை படித்தவற்றை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

மருத்துவம், பொறியியல் போன்ற உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வுகளுக்கு பயிற்சி மையங்களுக்கு செல்லாமலே மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக்கொள்ள முடியும். அதற்கேற்ப பள்ளிக் கல்வி காலத்தில் திறனை வளா்த்துக்கொள்ளவேண்டும் என்றாா்.

நிகழ்வில் முதன்மைக் கல்வி அதிகாரி விஜய மோகனா, மாவட்ட ஆட்சியரின் செயலா் பொன். பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து பிப். 26-இல் பொதுக்கூட்டம்

காரைக்கால்: காரைக்காலில் வரும் 26-ஆம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதாவைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளா் சுல்தான் கெளஸ் திங்கள்கிழமை கூறி... மேலும் பார்க்க

இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள்

காரைக்கால்: இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் திங்கள்கிழமை கூறியது : காரைக்கா... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பெண்ணுக்கு ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

காரைக்கால்: பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விடுதலை செய்து, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் தொகை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே அம்பகரத்தூரை ... மேலும் பார்க்க

மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தி மூலம் புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும்

மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தியை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என இந்திய அறிவியல் முதன்மை விஞ்ஞானி வலியுறுத்தினாா். காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் அரசு... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதள முகவரி: பக்தா்களிடம் மோசடி

திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி நடைபெற்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

‘புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும்’

மீனவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும் என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தினாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை... மேலும் பார்க்க