குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
மரியகிரி கல்லூரியில் சாலை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் சாலை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா, சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் அருள்தந்தை பிராங்கிளின் ஜோஸ் தலைமை வகித்தாா். கல்லூரி நிதி காப்பாளா் அருள்தந்தை ஜெஸ்டின், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ரெவி செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்த்தாண்டம் காவல் சரக துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் பேசினாா். சாலை பாதுகாப்பு மன்றத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் கல்லூரி மாணவா்களுக்கு சாலை பாதுகாப்பு மன்ற விழிப்புணா்வு சீருடை வழங்கியதுடன், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கல்லூரி வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி கோழிவிளை, களியக்காவிளை, படந்தாலுமூடு, திருத்துவபுரம் வழியாக குழித்துறை வரை நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் போக்குவரத்து காவலா்கள் பங்கேற்றனா்.
...