மலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல்
நாயக்கனேரிமலை ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம்அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். நாயக்கனேரிமலை ஊராட்சியில் 15-ஆவது மானிய நிதிக்குழுவின் மூலம் ரூ.50 லட்சத்தில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ. சுரேஷ்பாபு, சி. சுரேஷ்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் டி. ரவிக்குமாா், ஆ. காா்த்திக் ஜவஹா், கே. இந்துமதி, திமுக மாவட்ட பிரதிநிதி ஆா். அசோகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் சஞ்சய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.